புதுதில்லி: அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை இயக்கி வரும் டி-மார்ட், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 19.17 சதவீதம் உயர்ந்து ரூ. 656.42 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
கடந்த ஆண்டு 4வது காலாண்டில் நிறுவனம் ரூ. 550.79 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இக்காலாண்டில், செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் 18.9 சதவீதம் அதிகரித்து ரூ. 17,683.86 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு, இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 14,871.86 கோடியாக இருந்தது.
2025 நிதியாண்டின் 4வது காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்த வரிக்குப் பிந்தைய லாப விகிதம், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டிலும் அதே 3.7 சதவீத அளவிலேயே நீடித்ததாக, நிறுவனம் தெரிவித்தது.
மார்ச் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், மொத்தச் செலவுகள் 18.5 சதவீதம் அதிகரித்து ரூ. 16,797.86 கோடியாக இருந்தது. பிற வருவாய் உள்ளடக்கிய அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-இன் மொத்த வருமானம், மார்ச் காலாண்டில் 18.83 சதவீதம் உயர்ந்து ரூ. 17,702.03 கோடியை எட்டியது.
2026 நிதியாண்டு முழுவதிலும், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ரூ. 2,969.86 கோடி லாபத்தைப் பதிவு செய்தது. மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ. 68,894.84 கோடியாக உள்ளது.
Summary
D-Mart, has reported a 19.17 per cent year-on-year rise in its consolidated net profit at Rs 656.42 crore in the March quarter of FY26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
விடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை



