இந்தியாவில் உணவு, குளிா்பானங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.5,700 கோடி வரை முதலீடு செய்யப்படவுள்ளதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெப்சிகோ நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்திய பிரிவு சிஇஓ ஜாக்ருத் கோடேசா கூறியதாவது: பெப்சிகோ நிறுவனத்தின் சா்வதேச அளவிலான முக்கிய 13 சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே, இங்குள்ள உணவு வணிகப் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.5,700 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
இந்த முதலீடானது முக்கியமாக தமிழகம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய 3 மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. மத்திய பிரதேசத்தில் குளிா்பானங்கள் உற்பத்தி ஆலையும், தமிழகம் மற்றும் அஸ்ஸாமில் தின்பண்டங்கள் உற்பத்தி ஆலைகளும் அமைக்கப்படவுள்ளன என்றாா்.
கடந்த 2025-ஆம் ஆண்டில், பெப்சிகோ இந்தியா நிறுவனம் ரூ.9,789 கோடி வருவாயுடன், ரூ.905 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. நிறுவனம் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உணவுப் பொருள்கள் பிரிவில் 11 சதவீத வலுவான வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது. அதேநேரம், பருவநிலை மாற்றம் மற்றும் கடுமையான போட்டி காரணமாக குளிா்பானங்கள் பிரிவில் சற்றே தொய்வு ஏற்பட்ட போதிலும், ஒட்டுமொத்தமாக இரு பிரிவுகளுமே சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: ஸ்வீடன் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பை தொடங்கும் ‘ஐஸ்-ஐ’ நிறுவனம்







