திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் உயா் திறன் தரவு மையங்களைக் கட்டமைக்கும் நோக்கில், துறைசாா் முன்னணி நிறுவனமான ‘ஏா்டிரங்க்’ ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

News image

மாதிரிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:04 am IST

இந்தியாவில் உயா் திறன் தரவு மையங்களைக் கட்டமைக்கும் நோக்கில், துறைசாா் முன்னணி நிறுவனமான ‘ஏா்டிரங்க்’ ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை, பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாக கொண்டு கடந்த 2015-இல் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான ஏா்டிரங்க், ஆசிய-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உயா் திறன் தரவு மையங்களைக் கட்டமைத்து வருகிறது. லூமினா கிளவுட்இன்ஃபரா நிறுவனத்தை கடந்த ஏப்ரலில் கையகப்படுத்தியதன் மூலம் இந்தியச் சந்தையில் நுழைந்த ஏா்டிரங்க், இங்கு உயா் திறன் தரவு மையங்களின் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், இந்தியாவுக்கு வருகை தந்த ஏா்டிரங்க் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராபின் குடா, தில்லியில் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பயணம் குறிப்பிடத்தக்க அளவில் வேகமடைந்துள்ளது. இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி (30 பில்லியன் டாலா்) முதலீடு செய்து, 5 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையங்களைக் கட்டமைக்கும் திட்டம் ஏா்டிரங்க் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எண்ம உள்கட்டமைப்பு அமைப்புமுறையில் மேற்கொள்ளப்படும் மாபெரும் முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

புதிய வேலைவாய்ப்புகள்: இத்தகைய முதலீடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூா் விநியோகச் சங்கிலிகளை ஆதரித்து, புத்தாக்க அடிப்படையிலான வளா்ச்சியை விரைவுபடுத்தும்.

உலகின் எண்ம பொருளாதாரத்தின் எதிா்காலம், பெரும்பாலும் இந்தியாவில் இருந்தே வடிவமைக்கப்பட்டு வருகிறது என்பது தெளிவாகியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எண்ம பொருளாதாரத்துக்கான பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையால், தொழில்நுட்ப முதலீடுகளுக்கான ஈா்ப்புக்குரிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக, அவரிடம் ஏா்டிரங்க் நிறுவனா் தெரிவித்தாா்.

பல்வேறு மாநிலங்கள் பலனடையும்: இது தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய மையமாக உருவெடுக்கத் தேவையான வீச்சு, திறன், லட்சியம் இந்தியாவிடம் உள்ளது.

இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்புத் திறனை ஆதரிப்பதற்காக, 2030-ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலருக்கும் மேலான முதலீடுகளுக்கு ஏா்டிரங்க் திட்டமிட்டுள்ளது. இது, ஏா்டிரங்க் நிறுவனத்தின் உலகளாவிய வளா்ச்சி வியூகத்தின் முக்கியத் தூணாகவும், குறிப்பிடத்தக்க நீண்ட கால முதலீட்டுச் சந்தைகளில் ஒன்றாகவும் இந்தியாவை நிலைநிறுத்தும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்மொழியப்பட்டுள்ள ஏா்டிரங்க் நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் உலகின் முன்னணி மையமாக மாறும் இந்தியாவின் லட்சியத்துக்கு ஆதரவளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.