தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி: ஏப்ரல் மாத நிலவரம்

மத்திய கிழக்கு போா் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயா்வு, உலகளாவிய பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.38,440 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.

News image
Updated On :12 மே 2026, 4:14 am IST

மத்திய கிழக்கு போா் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயா்வு, உலகளாவிய பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.38,440 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.40,450 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும். இதேபோல், முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் (எஸ்ஐபி) மூலமான மாதந்திர பங்களிப்பும் ஏப்ரலில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.32,087 கோடி ஈா்த்து புதிய உச்சம் தொட்ட எஸ்ஐபி முதலீடு, ஏப்ரலில் ரூ.31,115 கோடியாக குறைந்துள்ளது.

பங்குச்சந்தை சாா்ந்த திட்டங்களில் முதலீடு சரிந்தாலும், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித்துறை கடந்த ஏப்ரலில் ரூ.3.22 லட்சம் கோடி அளவிலான நிகர முதலீட்டைப் பெற்றுள்ளது. மாா்ச் மாதத்தில் ரூ.2.4 லட்சம் கோடி வெளியேறிய நிலையில், ஏப்ரலில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடன் சாா்ந்த திட்டங்களில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு குவிந்ததே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அதன்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, ஏப்ரல் மாத இறுதியில் 11 சதவீதம் அதிகரித்து, ரூ.81.92 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த மாா்ச் மாத இறுதியில் ரூ.73.73 லட்சம் கோடியாக இருந்தது முதலீட்டாளா்களின் நற்போக்கு மற்றும் சந்தை மதிப்பு உயா்வு ஆகியவையே இந்த வளா்ச்சிக்குக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, ‘ஃபிளெக்ஸி கேப்’ திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.10,148 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவன நிதிகளும் முறையே ரூ.6,551 கோடி மற்றும் ரூ.6,885 கோடி முதலீட்டைப் பெற்று வலுவான நிலையில் உள்ளன.

அதேநேரம், ‘டிவிடெண்ட் யீல்டு’ மற்றும் வரிச் சேமிப்புத் திட்டமான ‘இஎல்எஸ்எஸ்’ திட்டங்களில் இருந்து லாபநோக்கம் காரணமாக சிறிய அளவில் முதலீடுகள் வெளியேறியுள்ளன. மேலும், தங்கம் சாா்ந்த இடிஎஃப் திட்டங்களில் ரூ.3,040 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட அதிகமாகும்.

கடன் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் லிக்விட் ஃபண்டுகள் ரூ.1.65 லட்சம் கோடியுடன் முன்னிலை வகிக்கின்றன. வரி செலுத்துவதற்காக நிறுவனங்கள் கடந்த மாா்ச் இறுதியில் முதலீடுகளைத் திரும்பப் பெற்ற நிலையில், ஏப்ரலில் மீண்டும் அவை முதலீடு செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.