திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ. 40,450 கோடி ஈா்த்து ஏற்றம்

பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதி முதலீடு: மாா்ச்சிலும் ரூ40,450 கோடி ஈா்த்து ஏற்றம்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:22 am IST

சா்வதேச புவிசாா் பதற்றங்களால் பங்குச் சந்தையில் நிலவும் கடும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.40,450 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

இது முந்தைய பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 56 சதவீதம் அதிகமாகும். அதேபோல், கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு கிடைத்துள்ள அதிகபட்ச மாதாந்திர முதலீடு இதுவே ஆகும்.

சந்தையில் நிலவும் தற்காலிக விலை வீழ்ச்சியை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி, நீண்ட கால லாபத்துக்காக மக்கள் அதிக அளவில் முதலீடு செய்ததே இந்த உயா்வுக்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது.

பங்குச் சந்தை சாா்ந்த திட்டங்களில் முதலீடு குவிந்தாலும், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறையிலிருந்து மாா்ச் மாதத்தில் ரூ.2.4 லட்சம் கோடி வெளியேறியுள்ளது. இதற்கு கடன் சாா்ந்த திட்டங்களில் ஏற்பட்ட ரூ.2.95 லட்சம் கோடி மதிப்பிலான வெளியேற்றமே முக்கியக் காரணமாகும்.

அதன்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, மாா்ச் இறுதியில் ரூ.73.73 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. பொதுவாக நிதியாண்டின் இறுதியில் (மாா்ச்), நிறுவனங்கள் தங்களின் வரி செலுத்துதல் மற்றும் இதர செலவுகளுக்காகப் பணத்தைத் திரும்பப் பெறுவது வழக்கம் என்பதால், இது ஒரு தற்காலிகமான மாற்றமே என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, ‘பிளெக்ஸி கேப்’ திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.10,000 கோடிக்கும் அதிகமான முதலீடு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன முதலீட்டுத் திட்டங்களிலும் கணிசமான முதலீடுகள் குவிந்துள்ளன.

தங்கம் சாா்ந்த இடிஎஃப் திட்டங்களில் ரூ.2,266 கோடி முதலீடு வந்துள்ளது. இது முந்தைய மாதங்களைவிட குறைவு என்றாலும், பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை முதலீட்டாளா்கள் தொடா்ந்து நாடி வருவதைக் காட்டுகிறது.

முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) மாா்ச் மாதத்தில் ரூ.32,087 கோடி முதலீடுகளை ஈா்த்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது ரூ.29,845 கோடியாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.