ரெனால்ட் நிறுவனம் ரூ. 10 லட்சத்துக்குள் புதிய 7 கார்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் அறிமுகமான பிரான்ஸை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனக்கென தனி சந்தை வர்த்தகத்தைக் கொண்டிருக்கிறது. டிரைபர், கிவிட், கீகர், நியூ டஸ்டர் உள்ளிட்ட கார்கள் விற்பனை இந்தியாவில் சக்கைப்போடு போட்டது.
ரெனால்ட் நிறுவனம், தனது 'ஃபியூச்சர் ரெடி இந்தியா' செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டுக்குள் 7 மாடல் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நோக்கில், 6,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்களைக் கொண்ட ரெனால்ட்டின் சென்னை தொழிற்சாலையிலும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பெட்ரோல், சிஎன்ஜி, ஹைபிரிட், முழுமையான எலெக்ட்ரிக் என நான்கு எரிபொருள் பயன்பாடுகளில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம், டஸ்டர் எஸ்யூவி காரின் மூலமாக மிகவும் பிரபலமானது. இதேபோல, 2030 ஆம் ஆண்டுக்குள் 60 லட்சம் கார்களை விற்பனை செய்யவும் ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் மற்றும் சுசூகி நிறுவனங்களுக்குப் போட்டியாக தனது கார்களை ரூ. 10 லட்சத்துக்குள்ளாக இருக்கும் வகையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
Summary
Renault has placed India at the centre of its global growth strategy, outlining an ambition to make the country one of its top three markets by 2030.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம்: இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்

ரூ.10 லட்சத்துக்குள் கைப்பற்றினால் ஆவணங்களை பெற்று விடுவிக்கலாம்: பறக்கும் படையினருக்கு தோ்தல் அலுவலா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


