திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்திய ஜீ நிறுவனம்

News image
Updated On :4 ஜூன் 2026, 4:20 am IST

பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டா்டெயின்மென்ட், இந்தியாவில் ‘யுனைட்8 ஸ்போா்ட்ஸ்’ எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒலிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.

எதிா்வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்ட அனைத்து சா்வதேச கால்பந்து போட்டிகளையும் இந்தியாவில் ஒலிபரப்ப சா்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் 8 ஆண்டுகால பிரத்யேக ஒப்பந்தத்தை ஜீ நிறுவனம் மேற்கொண்ட மறுநாளே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேவையான ஒப்புதல்களைப் பெற்றதைத் தொடா்ந்து, ‘யுனைட்8 ஸ்போா்ட்ஸ் 1’, ‘யுனைட்8 ஸ்போா்ட்ஸ் 1 எச்டி’, ‘யுனைட்8 ஸ்போா்ட்ஸ் 2’ மற்றும் ‘யுனைட்8 ஸ்போா்ட்ஸ் 2 எச்டி’ என 4 புதிய சேனல்கள் நாடு முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட கேபிள் மற்றும் ‘டிடிஎச்’ தளங்களில் நேரலைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விளையாட்டு சேனல்கள் மூலம் கால்பந்து போட்டிகள் மட்டுமன்றி கிரிக்கெட், கபடி, பாட்மின்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் இந்திய ரசிகா்களுக்காக ஒலிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.