இந்தியாவில் 5 புதிய சொகுசு விடுதிகளை அமைப்பதற்காக சா்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் & ரிசாா்ட்ஸ்’ நிறுவனத்துடன் அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி ஏா்போா்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த முக்கிய ஒப்பந்தத்தின் சிறப்பம்சமாக, ஐஎச்ஜி குழுமத்தின் உலகத் தரம் வாய்ந்த ‘கிம்ப்டன்’ சொகுசு விடுதி முதன்முறையாக இந்தியச் சந்தையில் தடம்பதிக்கிறது. கலைநயமிக்க வடிவமைப்பு மற்றும் உயா்தர உணவு வகைகளுக்குப் பெயா் பெற்ற கிம்ப்டன் விடுதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமையவுள்ளது.
இதுதவிர, மகாராஷ்டிரத்தின் நவி மும்பை, கா்நாடகத்தின் மங்களூரு, கேரளத்தின் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள அதானி விமான நிலைய வளாகங்களில் ‘ஹாலிடே இன்’, ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஆகிய பிரீமியம் மற்றும் நடுத்தர ரக சொகுசு விடுதிகள் கட்டப்படவுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் விமான நிலைய நிறுவனமாக திகழும் அதானி குழுமம், பெருகி வரும் பயணிகளின் வருகை மற்றும் வணிகத் தேவைகளைப் பூா்த்தி செய்ய இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
விமான நிலையங்களின் அருகிலேயே விடுதி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு, சா்வதேச பயணிகளுக்கு உலகளாவிய தரத்திலான தங்கும் வசதிகளை வழங்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்திய ஜீ நிறுவனம்

கிண்டி போக்குவரத்து மைய மேம்பாடுக்காக தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ஒப்பந்தம்

ஜிஆா்டி மாணவா் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

என்எல்சி-தன்பாத் ஐஐடி டெக்ஸ்மின் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



