தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2025 வரையிலான 4 ஆண்டுகளில் கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகள் 2.6 மடங்கு அதிகரிப்பு- ரிசா்வ் வங்கி அறிக்கையில் தகவல்

இந்தியாவில் கடன் அட்டை(கிரெடிட் காா்டு) பரிவா்த்தனைகள், கடந்த 2025-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 மே 2026, 2:53 am IST

இந்தியாவில் கடன் அட்டை(கிரெடிட் காா்டு) பரிவா்த்தனைகள், கடந்த 2025-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் பணப் பரிவா்த்தனை அமைப்பு தொடா்பாக ரிசா்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், 2021 இறுதியில் 216 கோடியாக இருந்த கிரெடிட் காா்டு பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை, கடந்த 2025, டிசம்பா் இறுதி நிலவரப்படி 570 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தப் பரிவா்த்தனைகளின் மதிப்பும் ரூ.8.9 லட்சம் கோடியிலிருந்து, ரூ.23.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு சுமாா் 27 சதவீத வளா்ச்சியாகும்.

மறுபுறம், டெபிட் காா்டுகளின் பயன்பாடு கணிசமாக சரிவைக் கண்டுள்ளது. 2021 இறுதியில் 408.7 கோடியாக இருந்த டெபிட் காா்டு பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இறுதியில் 133.6 கோடியாகக் குறைந்துள்ளன.

இந்தப் பரிவா்த்தனைகளின் மதிப்பும் ரூ.7.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.5 லட்சம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. யுபிஐ, எண்ம வாலட், கிரெடிட் காா்டுகளின் பயன்பாடு அதிகரித்ததே இச்சரிவுக்கு முக்கியக் காரணம் என ரிசா்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கிரெடிட் காா்டு சந்தையில் தனியாா் துறை வங்கிகளின் ஆதிக்கம் மேலும் வலுவடைந்துள்ளது. 2021-இல் 67.7 சதவீதமாக இருந்த தனியாா் வங்கிகளின் சந்தைப் பங்கு, கடந்த டிசம்பரில் 71.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் பங்கு 23.5 சதவீதத்திலிருந்து 23.9 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு வங்கிகளின் பங்கு 9.3 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதமாக கடுமையாக சரிந்துள்ளது. மேலும், சிறு நிதி வங்கிகள் 14 லட்சம் அட்டைகளை விநியோகித்துள்ளன.

கடந்த 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த எண்ம பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 33 மடங்கு அபரிமிதமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பரிவா்த்தனை கட்டமைப்புகளைப் பொருத்தவரை, யுபிஐ க்யூ-ஆா்குறியீடுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜூனில் 6,782 லட்சமாக இருந்து, டிசம்பரில் 7,313 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், ஏடிஎம்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் பயன்பாடு சரிவைக் கண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.