திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூா் வைஸ்யா வங்கி: ரூ.725 கோடி 41% வளா்ச்சி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :8 மே 2026, 11:26 pm IST

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபமான ரூ.513.36 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 41 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,025.26 கோடியிலிருந்து அதிகரித்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.3,519.45 கோடியை எட்டியுள்ளது. வட்டி வருவாய் மட்டும் ரூ.2,516 கோடியிலிருந்து, ரூ.2,903.65 கோடியாக அதிகரித்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,942 கோடியிலிருந்து 29.25 சதவீதம் கூடுதலாக ரூ.2,510 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.11,507.6 கோடியிலிருந்து ரூ.13,159 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2025-26 நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கியின் மொத்த வணிகம் ரூ.2,14,420 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.1,86,569 கோடியுடன் ஒப்பிடுகையில் 14.93 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வைப்புத்தொகை ரூ.1,15,666 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.20 சதவீதத்திலிருந்து 0.19 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டின் சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.2.6 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.