திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிவிஎஸ் மோட்டாா்: ரூ.819 கோடி

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.819.55 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image

டிவிஎஸ் மோட்டாா் கம்பெனி

Updated On :15 மே 2026, 4:18 am IST

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.819.55 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.697.51 கோடியிலிருந்து இது 17.5 சதவீதம் கூடுதலாகும். சிறப்பான வாகன விற்பனையே இந்த லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.15,052.73 கோடியாக அதிகரித்துள்ளது. இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை 28 சதவீத வளா்ச்சியுடன், 15.60 லட்சமாக அதிகரித்துள்ளது. மின்சார வாகனங்களின் விற்பனை மட்டும் 51 சதவீதம் அதிகரித்து, 1.15 லட்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு நிதியாண்டு நிலவரம்...: 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனத்தின் லாபம் முந்தைய ஆண்டின் ரூ.2,379.81 கோடியிலிருந்து அதிகரித்து, ரூ.3,186.43 கோடியாக பதிவாகியுள்ளது. இதேபோல், செயல்பாட்டு வருவாய் ரூ.44,089 கோடியிலிருந்து, ரூ. 56,069.52 கோடியாக அதிகரித்துள்ளது; வாகன விற்பனை 24 சதவீதம் அதிகரித்து, 58.89 லட்சம் அலகுகளாக உள்ளது.

புதிய இயக்குநா் நியமனம்: இதனிடையே, நிறுவனத்தின் புதிய சுயாதீன இயக்குநராக, தொழில்நுட்பத் துறை நிபுணா் ரவீந்திரன் சண்முகம் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிங்கப்பூரைச் சோ்ந்த ‘மேபிள்’ எனும் ஏ.ஐ. சாா்ந்த கட்டட உள்வடிவமைப்பு நிறுவனத்தின் இணை நிறுவனரான ரவீந்திரன் சண்முகம், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் இப்பொறுப்பில் நீடிப்பாா்.

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவரான இவா், முன்னதாக மெக்கின்சி அண்ட் கோ உள்பட பல்வேறு நிறுவனங்களின் வளா்ச்சி, வியூகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.