பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.3,103 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் லாபமான ரூ.2,956 கோடியுடன் ஒப்பிடுகையில் 5 சதவீத வளா்ச்சியாகும். வாராக்கடன் குறைந்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக வங்கியின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கியின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டு ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.18,599 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.19,980 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.6,389 கோடியிலிருந்து ரூ.7,109 கோடியாக அதிகரித்துள்ளது.
2025-26 முழு நிதியாண்டில், வங்கியின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்து, ரூ.12,156 கோடியாக பதிவாகியுள்ளது. மொத்த வருவாய் ரூ.77,411 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் ரூ.26,915 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
வங்கியின் நிகர வாரா கடன் 0.19 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகச் சரிந்துள்ளது. எனவே, வாரா கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,100 கோடியிலிருந்து ரூ.748 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதகமான நிதிநிலை முடிவுகளைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு தலா ஒரு பங்குக்கு ரூ.18.25 ஈவுத்தொகை வழங்க வங்கி இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் மூலதனத் தேவைகளுக்காகத் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளா்கள் மூலம் ரூ.5,000 கோடி வரை நிதியைத் திரட்ட வங்கி இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குநா் வினோத் குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஓபி லாபம் 43% வளா்ச்சி

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


