17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நிலையாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :5 ஜூன் 2026, 11:29 am IST

பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் இன்று (ஜூன் 5) நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,629.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 64.66 புள்ளிகள் குறைந்து 74,295.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.50 புள்ளிகள் குறைந்து 23,384.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்ட முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நிஃப்டி பொதுத்துறை வங்கி, நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. அதே நேரத்தில், நிஃப்டி மெட்டல், ஐடி, எஃப்எம்சிஜி ஆகியவை சரிந்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், எம்&எம், எட்டர்னல், சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.74 ஆக வர்த்தகம் தொடங்கியது

Summary

Stock Market: Sensex Nifty flat post RBI MPC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.