பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 4) வர்த்தக நேரம் முழுவதும் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில் இறுதியில் சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு பெற்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,935.83 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. எனினும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 13.84 புள்ளிகள் உயர்ந்து 74,360.01 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.95
புள்ளிகள் உயர்ந்து 23,416.55 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் முறையே 0.46, 0.49 சதவீதம் உயர்ந்துள்ளன.
துறைரீதியாக நிஃப்டி ஐடி, உலோகம், ரசாயனம் குறியீடுகள் சரிவைச் சந்தித்த நிலையில் நிஃப்டி நுகர்வோர் நீடித்த பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், தனியார் வங்கிகள் பிற துறைகள் நேர்மறையில் முடிந்துள்ளன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டிசிஎஸ், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் உயர்ந்தும் என்டிபிசி, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, ரிலையன்ஸ், எல்&டி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் முடிந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து 95.83 ஆக இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கொள்கை தொடர்பான கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முடிவுகள் நாளை(ஜூன் 5) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்ததாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Summary
Stock Market: Sensex settles flat, Nifty ends at 23,417 ahead of RBI MPC meet outcome
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











