பங்குச்சந்தைகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும்(மே 14) உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,947.12 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 789.74 புள்ளிகள் உயர்ந்து 75,398.72 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 277 புள்ளிகள் உயர்ந்து 23,689.60 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.12 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 0.01 சதவீதம் சரிந்து வர்த்தகமானது.
துறைவாரியாக நிஃப்டி பார்மா, சுகாதார சேவைகள், உலோகம் உள்ளிட்ட அனைத்துத் துறை பங்குகளும் உயர்ந்த நிலையில் ஐடி பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 50 குறியீடுகளில் சிப்லா, அதானி என்டர்பிரைசஸ், பாரதி ஏர்டெல் அதிக லாபம் பெற்றன.
சென்செக்ஸ் 30 பங்குகள் மாருதி, ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் லாபம் பெற்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 95.96 ஆகக் குறைந்துள்ளது.
Summary
Stock Market: Sensex jumps 790 pts, Nifty settles at 23,690; pharma, healthcare shine
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










