பங்குச்சந்தைகள் இன்று(மே 29, வெள்ளிக்கிழமை) கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,988.51 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,092.05 புள்ளிகள் குறைந்து 74,775.74 புள்ளிகளில் நிலைப் பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 359.40 புள்ளிகள் குறைந்து 23,547.75 புள்ளிகளில் நிலைப் பெற்றது.
தொடர்ந்து 3 ஆவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. முதலீட்டாளர்களுக்கு இன்று மட்டும் ரூ. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் அதிக நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்களாகும்.
அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் போன்ற ஐடி நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாயின.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.33 சதவீதம், 0.85 சதவீதம் சரிந்தன.
துறை வாரியாக, நிஃப்டி உலோகம், எண்ணெய் & எரிவாயு பங்குகள் 2% வரை சரிந்தன.
வர்த்தக நேர முடிவில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 92 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.05 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
stock market: Investors lose Rs 6 lakh crore as Sensex drops over 1,000 points
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










