ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

பங்குச்சந்தை.. - IANS

Updated On :12 மே 2026, 12:02 pm IST

நேற்றைத் தொடர்ந்து இன்றும்(செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,688.39 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 801 புள்ளிகள் குறைந்து 75,231.87 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 212.25 புள்ளிகள் குறைந்து 23,603.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், எம்&எம், டாடா ஸ்டீல், எட்டர்னல், என்டிபிசி, ரிலையன்ஸ், சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.77 சதவீதம், 1.06 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக, நிஃப்டி ஐடி குறியீடு அதிக சரிவைச் சந்தித்தது. தனியார் வங்கிகள், பார்மா, மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி ஆட்டோ, உலோகம், எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

கச்சா எண்ணெய் 0.76 சதவீதம் உயர்ந்து 105 டாலராக உள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்து 95.51 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

Summary

Stock Market: Sensex down 800 pts, Nifty tests 23,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.