பங்குச்சந்தைகள் இன்று(ஏப். 22, புதன்கிழமை) கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,019.34 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 535.64 புள்ளிகள் குறைந்து 78,737.69 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135.60 புள்ளிகள் குறைந்து 24,441.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், ட்ரெண்ட், என்டிபிசி, அல்ட்ரா சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பின்சர்வ், எட்டர்னல் ஆகியவை உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.21 சதவீதம், 0.65 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி சுகாதார சேவைகள், பார்மா, நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வரும் நிலையில் உலோகம், நுகர்வோர் பொருள்கள், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
Summary
Stock Market: Sensex drops 500 pts, Nifty near 24,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 753, நிஃப்டி 211 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,500, நிப்டி 440 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



