இந்த வாரத்தின் 2-ம் நாளாக இன்றும்(ஏப். 21) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,617.16 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 622.12 உயர்ந்து 79,139.52 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167.15
புள்ளிகள் உயர்ந்து 24,532.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.80 சதவீதம், 0.92 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹெச்சிஎல், பெல், அல்ட்ரா சிமெண்ட், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் இதர நிறுவனங்கள் உயர்த்தும் வர்த்தகமாகின்றன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், மீடியா, தனியார் வங்கிகள் உள்ளிட்ட பெரும்பாலான துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் ஐடி, பார்மா குறியீடுகள் சரிந்து வருகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேற்றத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 94.99 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.32 ஆக உள்ளது.
Summary
Stock Market: Sensex rises 500 points, Nifty near 24,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


