மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 6:16 am

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 4, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,477.53 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 382.72 புள்ளிகள் குறைந்து 72,936.83 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 400 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110.10 புள்ளிகள் குறைந்து 22,603 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.16 சதவீதம், 0.10 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

துறைவாரியாக, நிஃப்டி எண்ணெய் & எரிவாயு, பார்மா உள்ளிட்ட பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில் நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் ட்ரெண்ட், பவர்கிரிட், இன்போசிஸ் உள்ளிட்ட பஃங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.

இஸ்ரேல் - ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Summary

stock market: Sensex slumps 330 points, Nifty below 22,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.