/

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :24 ஏப்ரல் 2026, 6:07 am

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக இன்று(ஏப். 24, வெள்ளிக்கிழமை) கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,483.80 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 859.62 புள்ளிகள் குறைந்து 76,804.04 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 242 புள்ளிகள் குறைந்து 23,931.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, எம்&எம், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டிகோ, அல்ட்ரா,சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும், ரிலையன்ஸ், சன் பார்மா, எட்டர்னல், மாருதி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.57 சதவீதம், 0.70 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்தன. ஐடி பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி சுகாதார சேவைகள், பார்மா, நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்து 104 டாலர் என்ற அளவில் உள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடல்வழி முற்றுகை நீடிப்பதால் தொடரும் கச்சா எண்ணெய் விலை உயா்வின் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வ்ருகின்றன.

Summary

Stock Market: Sensex at days low, down 900 points, Nifty below 24,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.