ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

பங்குச்சந்தை - IANS

Updated On :7 மே 2026, 12:04 pm IST

நேற்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,339.24 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 108.74 புள்ளிகள் குறைந்து 77,849.78 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.85 புள்ளிகள் குறைந்து 24,327.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எம்&எம், ஐசிஐசிஐ வங்கி, எட்டர்னல், ட்ரெண்ட், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, எல்&டி உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் பெல், என்டிபிசி, டிசிஎஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.36 சதவீதம், 0.37 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக, நிஃப்டி எப்எம்சிஜி குறியீடு அதிக சரிவைச் சந்தித்தது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி ஆட்டோ பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

கச்சா எண்ணெய் 0.63 சதவீதம் உயர்ந்து 101.91 டாலராக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.74 ஆக உள்ளது.

Summary

Stock Market: Sensex falls 150 pts, Nifty tests 24300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.