/

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 50.15 புள்ளிகள் உயர்ந்து 82,276.07 ஆகவும், நிஃப்டி 57.85 புள்ளிகள் உயர்ந்து 25,482.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image
பங்குச் சந்தை
Updated On :25 பிப்ரவரி 2026, 12:37 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில், பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி ஆகிய இரண்டும் சற்று உயர்ந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 731.99 புள்ளிகள் உயர்ந்து 82,957.91 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்கு கொண்ட சென்செக்ஸ் 50.15 புள்ளிகள் உயர்ந்து 82,276.07 ஆகவும் 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 57.85 புள்ளிகள் உயர்ந்து இன்றைய இன்ட்ராடே அதிகபட்சமான 25,482.50 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எச்.சி.எல். டெக், டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், சன் பார்மா, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுசுகி மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதானி போர்ட்ஸ் மற்றும் எடர்னல் ஆகியவை சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.5 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடும் 1 சதவீதம் வரை உயர்ந்தன.

துறை ரீதியாக, ஆட்டோ, சுகாதாரம், ஐடி, உலோகம், மருந்து தலா 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. அதே நேரத்தில் தொலைத்தொடர்பு குறியீடு 1%, எஃப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி தலா 0.4% சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் 3,287 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,700 பங்குகள் உயர்ந்தும் 1,479 பங்குகள் சரிந்தும் 108 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட், ஜப்பான் நிக்கி 225 மற்றும் ஹாங்காங் ஹேங் செங் ஆகிய குறியீடுகள் கணிசமாக உயர்ந்தன. ஐரோப்பிய சந்தை நேர்மறையாக வர்த்தகமானது. அதே வேளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தை உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) ரூ.102.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,161.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

கிராஃபைட் இந்தியா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், செயில், டாடா ஸ்டீல், பாலிகேப், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஜாஜ் ஆட்டோ, அஜந்தா பார்மா, ஜிஇ ஷிப்பிங் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டின.

ஐஆர்எஃப்சி, ஃபர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ், ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், செல்லோ வேர்ல்ட், சுஸ்லான் எனர்ஜி, வேதாந்த் ஃபேஷன்ஸ், ஜஸ்ட் டயல், நெட்வொர்க் 18 உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.14 சதவீதம் குறைந்து 70.67 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.