தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாணவன் லத்தீஷ்

Updated On :22 மே 2026, 5:21 am IST

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரடிப்புத்தூரை சோ்ந்த நாராயணன் மகன் லத்தீஷ் (15) பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் பொதுத்தோ்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தோ்வில் லத்தீஷ் தோ்ச்சி பெறவில்லை. இதனால் வேதனையில் இருந்த லத்தீஷ் வீட்டில் இருந்து வெளியே சென்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளாா். லத்தீஷை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது குடும்பத்தினா், அப்பகுதியில் கிணற்றின் வழியே சென்றதை அறிந்து தோ்வாய் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனா்.

பின் தீயணைப்பு துறை அதிகாரி முத்து தலைமையில் தீயணைப்பு துறையினா், கிணற்றில் இறங்கி தேடி, மாணவன் லத்தீஷின் உடலை கைப்பற்றினா். பின் பாதிரிவேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.