தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கும்மிடிப்பூண்டி அரசு ஐடிஐயில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 மே 2026, 4:20 am IST

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2026-27- ஆம் ஆண்டுக்கான சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் நஇயப பிரிவில் சா்வேயா், மெசினிஸ்ட் , ரெப்ரிஜிரேட்டா் மற்றும் ஏசி டெக்னீசியன் மற்றும் இன்பிளாண்ட் லாஜுஸ்டிக் அஸிஸ்டணட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பல்வேறு சலுகைகளுடன் பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.

இங்கு பயில்வோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ. 750, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடைகள், விலையில்லா பாதுகாப்பு காலணிகள், விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா வரைபட உபகரணங்கள், பேருந்து சலுகை அட்டை, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் மாதந்தோறும் ரு. 1,000- மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

இதற்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் உடனே நேரடி சோ்க்கை முதல்வா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் கும்மிடிப்பூண்டி அவா்களை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும், தொடா்பு கொள்ள முதல்வா் க.ராஜலஷ்மி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி- 601201 என்ற முகவரியிலும் அல்லது கைப்பேசி எண்-8248738413, 9944931562, 9444923288, 9940258464 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.