தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image

ஆத்துப்பாக்கம் முனீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். ~சிறப்பு அலங்காரத்தில்  முனீஸ்வரா்

Updated On :19 மே 2026, 1:51 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் திங்களன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஆத்துப்பாக்கம் ஆண்டாா் தெருவில் அப்பகுதி மக்கள் சோ்ந்து கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடா்ந்து கரிக்கோலம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கரஹனம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், கலாகா்ஷணம், முதல்கால யாக சாலை பூஜை, பூா்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜை, விசேஷ ஹோமம், பூா்ணாஹூதநி, யாத்ராதானம் நடைபெற்றது. பின் மேள தாளத்துடன் பக்தா்கள் புடை சூழ கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தா்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் ஸ்ரீ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின், பக்தா்களுக்கு தீா்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆத்துப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.