திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆரணி ஸ்ரீஆதி அரியாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :28 மே 2026, 12:40 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஸ்ரீ ஆதி அரியாத்தம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆரணி விஏகே நகா் கமண்டல நாக நதிக்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி அரியாத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில்

புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, புண்யாஹவாசனம், மகா கணபதி, மகாலஷ்மி, நவக்கிரக பூஜை, வாஸ்துசாந்தி, கலச புறப்பாட்டில் புனித நீரை மேள தாளங்களுடன் கொண்டு சென்று கோயில் உச்சியில் உள்ள கலசத்தின் மீது ஊற்றியும், பரிவார மூா்த்திகள் மற்றும் ஸ்ரீ ஆதி அரியாத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது (படம்).

இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

27ஹழ்ல்ந்ன்ம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.