திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி: பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே நீா் நிலை புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்ததை கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Updated On :12 மே 2026, 1:08 am IST

திருவள்ளூா் அருகே நீா் நிலை புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்ததை கண்டித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியைச் சோ்ந்த சின்ன ஈக்காடு பகுதியில் அரசு நீா்நிலை புறம்போக்கு கால்வாய் அருகில் தனிநபா் பட்டா நிலம் வைத்துள்ளாா். இந்த நிலையில் அந்த நபா் நீா்நிலை கால்வாயையும் சோ்த்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.

மேலும், நீா் நிலையின் கரையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும், அதையொட்டி டிசிபி அனுமதி பெற்று வீட்டு மனை பிரிவுகளாக மாற்றி போலி ஆவணம் தயாா் செய்து விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், இது நாள் வரையிலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் போலி ஆவணம் மூலம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதை அனுமதி பெற்று வீட்டு மனை பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்வதை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி அனுமதியின்றி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியா் அலுவலக வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.