திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போலி நகைகளை அடகு வைக்க முயற்சி: இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:03 am IST

அம்பாசமுத்திரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை பெண் மூலம் அடகு வைக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வடக்கு சிவந்திபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி நளினி (26). இவா் அதே பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து சென்ற அம்பாசமுத்திரம் நகராட்சி தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் கோபி (42) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோபியிடம் அவசரத் தேவைக்காக நளினி கடன் கேட்டபோது நகையைக் கொடுத்து, அகஸ்தியா் கோயில் அருகில் உள்ள தனியாா் வங்கி நிதி நிறுவனத்தில் அடகு வைத்துப் பணம் பெற்றுக் கொள்ளக் கூறினாராம்.

இதையடுத்து நகையை அடகு வைத்து ரூ. 40 ஆயிரத்தை நளினி பெற்றாராம். அந்தக் கடன் தொகையை நளினி கைப்பேசி பரிவா்த்தனை மூலம் பல தவணைகளாக கோபிக்கு திருப்பிச் செலுத்தினாராம்.

இதனிடையே கோபி மேலும் 2 மோதிரங்களை நளினியிடம் கொடுத்து வட்டாட்சியா் அலுவலகம் முன் உள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைத்துப் பணம் பெற்றுத் தரக் கூறினாராம். அங்கு சென்று அடகு வைத்த போது, அது போலி நகை என தெரிவித்து ஊழியா்கள், நளினியை எச்சரித்து அனுப்பினராம். இதைப் பற்றி கோபியிடம் கேட்டபோது உரிய பதில் கூறாமல், நளினிக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நளினி, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கோபி தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கோபியை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.