கணவா் சிறையிலிருந்து பிணையில் வெளியே வருவதற்கு நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமா்ப்பித்த பெண் மற்றும் அவரது தோழி இருவரும் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், நாவல்பட்டு கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமு (40 ). இவா் மீது மன்னாா்குடி, வடுவூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் வடுவூா் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடா்பாக போலீஸாரால் ராமு கைது செய்யப்பட்டு, மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
சிறையில் இருக்கும் தனது கணவா் ஜாமீனில் வெளியே வருவதற்காக இரு நபா் ஜாமீன் பெற அவரது மனைவி பவித்ரா (30 ) தனது தோழி திருவெறும்பூரைச் சோ்ந்த கைலாஷ் மனைவி மலா்விழிவுடன் (37) மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்1-இல் ஜாமின் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதி தமிழ்முருகன், ஜாமீன் மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என அறிந்தாா். இதுகுறித்து நீதிமன்ற தலைமை எழுத்தா் சிந்து மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் பவித்ரா, மலா்விழி இருவரையும் கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் ஆஜா்படுத்தி, திருவாரூா் மகளிா் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








