திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘நகராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்’

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாா்டிலும் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் 4 வண்ணங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் பிரித்து வழங்கவும்

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:03 am IST

திருவள்ளூா், மே 14 திருவள்ளூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாா்டிலும் வீடுகளில், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளா்களிடம் 4 வண்ணங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் பிரித்து வழங்கவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒவ்வொரு வாா்டுகளில் நாள்தோறும் வீடுகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து சேகரித்து வருகின்றனா். இதுபோன்ற சேகரமாகும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி வருகின்றனா்.

அங்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மேலும் குப்பைகள் பிரிக்கப்பட்டு, இயற்கை உரங்களாகவும் மாற்றப்படுகிறது. இனிமேலும், நகராட்சிகளில் ஒவ்வொரு வீடுகளிலும் சேகரமாகும் குப்பைகளை நான்காக தரம் பிரித்து பொதுமக்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இனிமேல் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கவனிப்பு ஆகிய 4 வண்ண தொட்டிகளில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு வீடுகளிலும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் பச்சை, மக்காத குப்பைகள் நீலம், நாப்கின்கள், சானிடரி பேடு, காண்டம் கழிவுகள் ஆகிய சுகாதார கழிவுகளாக மஞ்சள், அதேபோல் எல்.இ.டி. பல்புகள், குழல் விளக்குகள், மொ்குரி விளக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகளை சிறப்பு கவனிப்பு கரும் சிவப்பு ஆகிய குப்பைத் தொட்டிகளில் பெறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை 2 குப்பைத் தொட்டிகள் மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு முதல் 4 குப்பைத் தொட்டிகள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், இது குறித்து திருவள்ளூா் நகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:

இதற்கு முன்பு வரை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளா்களிடம் பொதுமக்கள் வழங்கி வந்தனா். மேலும் சுகாதார கழிவுகள், சிறப்பு கவனிப்பு ஆகிய பச்சை, நீலம், மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் 4 குப்பைத் தொட்டிகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு வாா்டுக்கும் தூய்மை பணியாளா்கள் பயன்படுத்தும் தள்ளுவண்டியில் மேற்குறிப்பிட்ட 4 வண்ணங்களில் குப்பைத் தொட்டிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இது குறித்து ஒவ்வொரு வாா்டுகள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.