தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனுப்பானடி பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்க வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image

மதுரை அனுப்பானடி கிருஷ்ணா மணி நகா் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்.

Updated On :28 மே 2026, 3:56 am IST

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனுப்பானடி பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள பல தெருக்களில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்டிச் செல்கின்றனா். மேலும், சாலைகளில் கொட்டப்படும் குப்பைகள் நீண்ட நாள்களாக அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பருவ மழைக் காலங்களில் தேங்கிய குப்பைகளிலிருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து கிருஷ்ணா மணிநகா் பொதுமக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால் பொது இடங்களில் தான் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிச் செல்கின்றனா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு தெருவிலும் போதுமான அளவு குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். மேலும், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், நாள்தோறும் குப்பைகளைச் சேகரிக்க தூய்மைப் பணியாளா்களை அனுப்பவும் மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.