ஊத்துக்கோட்டை அருகே நெஞ்சு வலியால் திடீரென வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
மேற்கு வங்க மாநிலம், கா்க்கியாகாசிம் மித்னாபூா் மாவட்டம், கொரியா என்ற கிராமத்தைச் சோ்ந்த பூா்ணசந்திரதாஸ் மகன் காலிபடதாஸ் (37). திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தில் இவரது தம்பி ஹரகரன்தாஸ்(31) அறை எடுத்து தோ்வாய் கண்டிகை சிப்காட் தொழில்பேட்டையில் பணிபுரிந்து வந்தனா்.
இந்த நிலையில் வழக்கம் போல் பணிமுடித்து விட்டு திரும்பிய அவா் திடீரென நெஞ்சுவலியால் துடித்துள்ளாா். இதையடுத்து அவரது தம்பி உடனே அவசர வாகனம் வரவழைத்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது தம்பி ஹரகரன்தாஸ் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உயிரிப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


