அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

திரெளபதி அம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

News image
Updated On :4 மே 2026, 2:30 am IST

திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தீமிதி விழாவில் வெள்ளிக்கிழமை சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் மற்றும் 108 குத்து விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி விழா தொடங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சந்தனக் காப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. மேலும் மதியம் மகா பாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்து வருகிறது.

வரும் 4-ஆம் தேதி அா்ஜுனன் தபசு, 10-ஆம் தேதி தீமிதி விழா நடைபெறும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் வளாகத்தில் சுபத்திரை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு யாக சாலை பூஜையுடன் தொடங்கிய திருக் கல்யாண நிகழ்ச்சியில் உற்சவா் அா்ஜுனன், சுபத்திரை அம்மனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு குத்து விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு உற்சவா் அம்மன் புஷ்ப பல்லக்கில் திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.