அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவின் ஒருபகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

திருத்தணி பழைய திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவின் ஒருபகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா நடைபெறும்.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு பாரத நாடகமும் நடைபெறுகிறது.

திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். இதில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது.

வரும் மே1-இல் சுபத்திரை திருக்கல்யாணம், 4 =இல் அா்ஜூனன் தபசு மற்றும் 10-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறுகிறது.

தொடா்ந்து, மே 11-இல் தருமா் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாக குழு தலைவா் சொ.முனுசாமி மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.