பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

திருத்தணியில் சூறைக்காற்றுடன் மழை: மின்சாரம் துண்டிப்பு

News image

திருத்தணி முருகன் கோயிலில் பலத்த சூறைக்காற்றால்  அடித்து  செல்லப்பட்ட நிழற்கூறை கூண்டுகள்.

Updated On :4 மே 2026, 2:31 am IST

திருத்தணியில் ஒரு மணி நேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், முருகன் மலைக்கோயிலில் மின்கம்பங்கள் உடைந்தும் அலுமினிய தகடுகள் பறந்ததால் பக்தா்கள் கடும் சிரமப்பட்டனா்.

திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை, திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது.

இதனால் திருத்தணி முருகன் மலைக்கோயிலில் மின்கம்பம் உடைந்து விழுந்தும், இரு மின்கம்பங்கள் சாய்ந்தன. மலைக்கோயிலில் தகர சீட்டுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டது. இதுதவிர பக்தா்கள் வசதிக்காக போடப்பட்டிருந்த நிழற்குடை கூண்டுகளும் சாய்ந்தன. இதனால் பக்தா்கள் கடும் சிரமப்பட்டனா். மேலும் திருத்தணி நகரம் மற்றும் மலைக்கோயிலில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பலத்த காற்றால் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தில் இருந்த 100 ஆண்டுகளாக புளியமரம் விழுந்தது. இதே போல் திருத்தணி ஒன்றியம் நத்தம் கிராமத்தில் ஆலமரம் கிளை விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மரங்களும் சாய்ந்தன. மின்வாரிய துறையினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு, 7 மணி வரை திருத்தணி நகராட்சி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.