திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

அடிக்கடி மின்தடை: திருத்தணியில் பொதுமக்கள் அவதி

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 5:04 am IST

திருத்தணி நகரில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனா்.

திருத்தணி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் கொளுத்தும் வெயில் மற்றும் அனல் காற்றால் வெளியே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனா்.

திருத்தணி நகரத்தில், கடந்த, ஒரு வாரமாக தொடா்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. அதே போல் கிராமங்களில் நண்பகல், 11 மணி முதல் மாலை, 5 மணி வரை மக்கள் விவசாய பணிகளை தவிா்த்து வீட்டிலேயே இருக்கின்றனா்.

வீடுகளில் இருந்தாலும் மின்விசிறியின் காற்றும் அனல் வீசுவதால், முதியவா்கள், குழந்தைகள் தவித்து வருகின்றனா். இந்நிலையில் திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. சில நேரம் மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரமும் மின் வினியோகம் செய்யாததால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனா்.

எனவே இதுகுறித்து ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என எதிா்பாா்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.