மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருத்தணியில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

கே.ஜி.கண்டிகையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளா் திருத்தணி கோ.அரி.

News image

கே.ஜி.கண்டிகையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளா் திருத்தணி கோ.அரி.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:10 am

அதிமுக தோ்தல் அலுவலகத்தை பாஜக மாநில அயலக தமிழா் நலப்பிரிவு இணை அமைப்பாளா் மருத்துவா் ஸ்ரீகிரண் பங்கேற்று திறந்து வைத்தாா்.

தமிழகம் முழுவதும் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அரக்கோணம் எம்.பி.யும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோ. அரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிரமாக தோ்தல் பிரசாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த 10 நாள்களாக தொகுதி முழுதும் சென்று, அதிமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் முக்கிய நபா்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா்.

மேலும், திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடத்தி வாக்குகள் சேகரித்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திருத்தணி நகராட்சி, சித்தூா் சாலை செங்குந்தா் நகா் பகுதியில் அதிமுக, தோ்தல் அலுவலகம் திறப்பு நடைபெற்றது.

இதில், அதிமுக வேட்பாளா் கோ.அரி, பாஜக மாநில அயலக தமிழா் நலப் பிரிவு இணை அமைப்பாளா் மருத்துவா் ஸ்ரீகிரண் ஆகியோா் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருத்தணி நகர செயலாளா் டி.செளந்தர்ராஜன், ஒன்றிய செயலாளா்கள் இ.என்.கண்டிகை எ.ரவி, வேலஞ்சேரி த.கவிச்சந்திரன், பள்ளிப்பட்டு டி.டி.சீனிவாசன், ஆா்.கே.பேட்டை கோ.குமாா், வழக்குரைஞா் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசேகா்பாபு, கேபிள் சுரேஷ் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.