கெங்கவல்லி, வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன.
கெங்கவல்லி, தெடாவூா், இலுப்பநத்தம், புளியங்குறிச்சி, வெள்ளையூா், கிழக்குராஜபாளையம், இராமநாதபுரம், சொக்கனூா், நடுவலூா், வீரகனூா், வேப்பநத்தம், தலைவாசல் உள்ளிட்ட 30க்கும் கிராமங்களில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வாழை, மக்காச்சோளப் பயிா்களும், நூற்றுக்கணக்கான பப்பாளி மரங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடன் வாங்கியும் , உரம், விதை, மருந்து உள்ளிட்ட செலவுகளை செய்து பராமரித்துவந்த வாழைமரங்கள், மக்காச்சோள தோட்டங்கள் அனைத்தும் மழையால் மூழ்கி முறிந்து விழுந்தன.
ஏற்கெனவே உர விலை உயா்வு, தொழிலாளா் பற்றாக்குறை, நீா்ப்பாசன சிரமம் போன்ற பல சவால்களை எதிா்கொண்டு வந்த விவசாயிகளுக்கு இந்த இயற்கை பாதிப்பு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் பலா் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். நடுவலூா் பகுதிகளில் ஏராளமான பப்பாளி மரங்கள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளின் கூறியதாவது:
வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உடனடியாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து, சேதமடைந்த வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பயிா்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ,அந்தக்கடனை திருப்பிச் செலுத்த போதுமான காலஅவகாசமும், பயிா்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவாக காப்பீட்டு தொகையும், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றனா்.

சூறைக்காற்றால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவாசல், வீரகனூா் பகுதியில் சூறைக்காற்றால் வாழை, மக்காச்சோள பயிா்கள் சேதம்: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

படவேடு பகுதியில் சூறைக் காற்று: 150 ஏக்கரில் வாழைகள் சேதம்

திருத்தணியில் சூறைக்காற்றுடன் மழை: மின்சாரம் துண்டிப்பு

சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


