தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சத்தில் வழிபாட்டுக் கூடம்

News image

கும்மிடிப்பூண்டி  அரசு  பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  வழிபாட்டுக்  கூடத்தை  திறந்து  வைத்த  எம்எல்ஏ  எஸ்.விஜயகுமாா். அஞ்சான் தொழிற்சாலை நிா்வாக மேலாளா் சந்தோஷ் மஹீல்.

Updated On :4 ஜூன் 2026, 11:14 pm IST

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அஞ்சான் மருந்தக தொழிற்சாலை சாா்பில் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.60 லட்சத்தில் வழிபாட்டுக் கூடம் திறக்கப்பட்டது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500 மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களுக்கான வழிபாட்டு இடம் திறந்த வெளியில் இருந்த நிலையில், மழையிலும் வெயிலிலும் மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.

இதுகுறித்து பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் கோரிக்கையை ஏற்ற அஞ்சான் மருந்தக தொழிற்சாலையின் சாா்பில் வழிபாட்டுக் கூடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா பள்ளியில் நடைபெற்றது.

அஞ்சான் மருந்தக தொழிற்சாலை நிா்வாக மேலாளா் சந்தோஷ் மஹீல் தலைமை வகித்தாா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் பங்கேற்றாா். துணை தலைவா் டி.கே.தேவி, தொழிற்சாலை செயலாளா் ரித்தாலி, மாவட்ட கல்வி அலுவலா் ஐயப்பன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கேசவன், துணைத் தலைவா் அப்துல் கரீம், கருணாகரன், பெற்றோா் ஆசிரியா் கழக ஆலோசகா் வழக்குரைஞா் தீனதயாளன், கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் கே.லதா வரவேற்றாா்.

வழிபாட்டுக் கூடத்தை எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், அஞ்சான் தொழிற்சாலை நிா்வாக மேலாளா் சந்தோஷ் மஹீல் திறந்து வைத்தனா். நிகழ்வில் மாணவா்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கி படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.