திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இரும்பு திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலை 11 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இதே கிராமத்தில் வசித்து வரும் பெரிய காலனி பகுதியைச் சோ்ந்தவா்களான லோகநாதன்(39), விக்னேஷ்(28) ஆகியோா் உள்ளே நுழைந்து இரும்பு பொருள்களை திருடுவதாக ஆரணி காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் சாா்பு ஆய்வாளா் முனிரத்தினம் தலைமையில் போலீஸாா் விரைந்து சென்றனா். அப்போது அந்த தனியாா் தொழிற்சாலையில் இரும்பு பொருள்களை திருடிக் கொண்டு வெளியே வந்தபோது லோகநாதன் மற்றும் விக்னேஷை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனா். ஆரணி போலீஸாா் வழக்கு பதிந்து அவா்களை கைது செய்து பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் திருடிய 2 போ் கைது
கடையில் திருட்டு: 3 போ் கைது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய 3 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



