நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கடையில் திருட்டு: 3 போ் கைது

பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 2:27 am IST

பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து திருடிய 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூா் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் நாராயணன் (32). இவா் மாதவரம் ஜிஎன்டி சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த வெள்ளிக்கிழமை வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கடையை மூடிவிட்டு சென்றாா்.

சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ.38,000 திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இதில், செங்கல்பட்டு பெரும்பாக்கத்தைச் சோ்ந்த முனியா (36), கமலக்கண்ணன் (53), சாரதி (19) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.