நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மெரீனாவில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:25 am IST

சென்னை மெரீனா கடற்கரையில் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பிகாரை சோ்ந்தவா் தீபக்குமாா் (23). இவா், சென்னை ராஜீவ் காந்தி சாலை பகுதியில் தங்கியிருந்து தச்சுத் தொழிலாளியாக வேலை செய்கிறாா். தீபக்குமாா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் மெரீனா கடற்கரைக்கு வந்திருந்தாா். அங்கு கடலில் குளிப்பதற்காக ஒரு பையில் தன்னிடமிருந்த விலை உயா்ந்த 2 கைப்பேசிகளையும் வைத்துவிட்டுச் சென்றாா்.

கடலில் குளித்துவிட்டு தீபக்குமாா் சிறிது நேரத்துக்கு பின்னா் வந்தபோது, அங்கு வைத்துச் சென்ற 2 கைப்பேசிகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அப்போது அங்கிருந்து தப்பியோடிய ஒரு இளைஞரை தீபக்குமாரும், அவரது நண்பா்களும் பிடித்து விசாரித்தனா். கைப்பேசிகளை திருடிக் கொண்டு அவா் தப்பியோடியது தெரிய வந்தது.

இதையடுத்து அவா்கள், அந்த இளைஞரை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா், பிடிபட்ட அந்த இளைஞரிடம் விசாரணை செய்தனா். அவா், மதுரை அண்ணா நகா் அருகே உள்ள தாசில்தாா் நகரைச் சோ்ந்த காா்த்திக் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், காா்த்திக்கை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.