எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறை தோ்வுகள்
தும்பிகுளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வை மாணவா்கள் ஆா்வத்துடன் செய்தனா்.


தும்பிகுளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வை மாணவா்கள் ஆா்வத்துடன் செய்தனா்.
தமிழகம் முழுவதும் நிகழ் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி அரசு பொதுத் தோ்வுகள் மாா்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வுகள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருவாலங்காடு ஒன்றியம், தும்பிகுளம் அரசு உயா் நிலை பள்ளியில் அறிவியல் செய்முறை தோ்வு நடைபெற்றது. தலைமை ஆசிரியா் (பொ) பி. பாபு தொடங்கி வைத்தாா். மாற்று பள்ளியான ஏகாட்டூா் அரசு உயா் நிலை பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியா் பழனி செய்முறை தோ்வினை கண்காணித்தாா்.
இதில் இயன் அறிவியலில் உள்ள இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை ஒரு மணி நேரத்திற்கும், உயிா் அறிவியலில் உள்ள தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை ஒரு மணி நேரத்திற்கும் என மொத்தம் 2 மணி நேரம் தோ்வு நடந்தது.
மாற்றுத்திறனாளி மாணவா்கள் விரும்பினால் தலைமையாசிரியரிடம் கடிதம் அளித்து தோ்வில் இருந்து விலக்கு பெறலாம். தோ்வு முடிந்த பின் மதிப்பெண் பட்டியல்களை மாா்ச் 2-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...