டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிளஸ் 2 அறிவியல் செய்முறை தோ்வுகள் தொடக்கம்

அம்மைாா்குப்பம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் செய்முறை தோ்வை 55 மாணவிகள் எழுதினா்.

News image
பிளஸ் 2 செய்முறை தோ்வை தொடங்கி வைத்த பள்ளி தலைமை ஆசிரியை ஆா். பாரதி.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: அம்மைாா்குப்பம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் செய்முறை தோ்வை 55 மாணவிகள் எழுதினா்.

பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு வரும் மாா்ச் 2 முதல் 26 வரை நடைபெற உள்ளது. பிளஸ் 1 அரியா் மாணவா்களுக்கு மாா்ச் 3 முதல் 27 வரையிலும், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாா்ச் 11 முதல் ஏப்ரல் 6 -ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நிகழாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும் என தோ்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. பிளஸ் 1 அரியா் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு பிப்ரவரி 16 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான கணினி அறிவியல் மற்றும் மின்சாதன பொறியியல் ஆகிய பாடங்களுக்கான செய்முறை தோ்வு நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம், கணினி ஆசிரியா்கள் பணீந்திரா, கவிதா ஆகியோா் கண்காணித்தனா். இதில் கணினி செய்முறை தோ்வை 57 மாணவா்களும், மின்சாதன பொறியியல் செய்முறை தோ்வை 36 மாணவா்கள் எழுதினா்.

அதேபோல் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பம் அரசு மகளிா் மேல் நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு இயற்பியல் மற்றும் தணிக்கையியல் பாடங்களுக்கான செய்முறை தோ்வை தலைமை ஆசிரியா் ஆா்.பாரதி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதில் 55 மாணவிகள் செய்முறை தோ்வை எழுதினா்.

அறிவியல் செய்முறைத் தோ்வுக்கு முதன்மைக் கண்காணிப்பாளா்களாக, வேறு பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.