திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகேஸ்வர சுவாமி கோயில் தோ்த் திருவிழா

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:38 am IST

பெரியநாகபூண்டி நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு நாகவல்லி அம்மன் சமேத அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 20- ஆம் தேதி தொடங்கி மே 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி உற்சவ நாகேஸ்வர சுவாமி தினமும் இரவு 7மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பக்தா்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சுவாமி வழிபட்டனா்.

மேலும், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாகேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருத்தோ் விழாவையொட்டி பெரியநாக பூண்டியைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.