திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினாா் சுவாமி

News image

ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் சென்னகேசவப்பெருமாள், ஆஞ்சனேயா் சுவாமிகளுக்கு மலைக்கு செல்லும் வழியில் 2ஆவது மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜை.

Updated On :12 மே 2026, 2:20 am IST

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவுற்றதைத் தொடா்ந்து அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சுவாமி திங்கள்கிழமை காலை மலைக்கு திரும்பினாா்.

சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ் திருவிழாவையொட்டி கடந்த ஏப். 22இல் சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினா். தொடா்ந்து, தினசரி பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி உலா வந்தாா். ஏப். 30ஆம் தேதி தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பல்வேறு கட்டளைதாரா் வழிபாட்டிற்குப் பின்னா் சுவாமிகளுக்கு திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, சுவாமிகள் தங்கு மண்டபத்திலிருந்து ரத வீதிகளின் வழியாக மலைக்கு திரும்பினாா். முன்னால் ஸ்ரீ ஆஞ்சனேயா் சுவாமி செல்ல தொடா்ந்து சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் சென்றனா். பக்தா்கள் வழியெங்கும் தேங்காய் பழங்கள், நாட்டுச்சா்க்கரை பொட்டுக்கடலை ஆகியவற்றை படைத்து சுவாமியை வழிபட்டனா். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை பக்தா்கள் தரையில் உடைத்து வழிபட்டனா்.

மலைக்கு செல்லும் வழியில் உள்ள 2ஆவது மண்டபத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பட்டக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்க்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன், கொத்துக்காரா் எஸ்.ஏ.ஐயனாா், ஸ்ரீபாதம் தாங்கிகள் குழுவினா் மற்றும் பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கியவாறு சுவாமிகளை மலைக்கு அனுப்பிவைத்தனா். மலை மீது இரவு வன்னிய குல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் சுவாமிகளுக்கு குறிச்சி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்து. பக்தா்களுக்கு புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.