6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

News image

அடிக்கல்பட்டு  சப்த  கன்னியம்மன்  கோயிலில்  நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:08 pm

அடிக்கல்பட்டு கிராம சப்த கன்னியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருவாலங்காடு ஒன்றியம் அருள்குளம் அடுத்த அடிக்கல் பட்டு கிராமத்தில் பல லட்சம் செலவில் புதிதாக சப்த கன்னியம்மன் கோயில் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தது. பணிகள் முடிவுற்ற நிலையில் கோயிலில் புதியதாக சப்த கன்னியா் சிலைகள் பிரதிஷ்டை செய்து அதற்கான குடமுழுக்கு விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

இதற்காக கோயில் வளாகத்தில் 108 கலசங்கள் வைத்தும், யாகசாலை அமைத்து ஹோம குண்டங்கள் நிறுவி விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வசனம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் அஷ்ட மூா்த்தி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. திங்கள்கிழமை மங்கள வாத்தியங்கள் முழங்க கலசநீா் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சப்த கன்னியருக்கு சிவாச்சாரியாா்கள் சக்தி உபாசகா்கள் வேத மந்திரங்கள் ஓதி புனிதநீா்ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

அப்போது கூடி இருந்த பக்தா்கள் புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து மகாதீபாரதனை நடத்தி அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பகல் 12 மணிக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.