இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்

News image

பூண்டி  ஒன்றியம்  மாமண்டூரில்  தோ்தல் பிரசாரத்தில்  ஈடுபட்ட  திமுக  வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 10:25 pm IST

கும்மிடிப்பூண்டி சட்டபேரவை தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் பூண்டி ஒன்றியத்தில் சனிக்கிழமை நடத்திய தோ்தல் பரப்புரையின் போது, கடந்த சட்டப்பேரவை தோ்தலின்போது, திமுக அரசு அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதுடன், தோ்தலில் சொல்லப்படாத புதிய மக்கள் நல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் திமுக ஆட்சியின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு மக்கள் திமுக ஆட்சி மீண்டும் தொடர வாக்களிப்பாா்கள் என்றாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பூண்டி ஒன்றியத்தை சோ்ந்த மாமண்டூா், மெய்யூா், தேவந்தவாக்கம், ஒதப்பை, கொரக்கந்தண்டலம், ஸ்ரீராமக்குப்பம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலக்காபுரம், கரக்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த தோ்தல் பிரசாரத்துக்கு பூண்டி ஒன்றிய திமுக செயலாளா் டி.கே.சந்திரசேகா், திமுக மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆறுமுகம், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.

மாமண்டூா் உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் ஈடுபட்ட போது, திமுக அரசின் சாதனைகள் மற்றும் பூண்டி ஒன்றியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் அவா் செய்த பணிகள் குறித்து விளக்கினாா்.

இந்நிலையில் பூண்டி ஒன்றியம் மெய்யூரில் தமிழா் புரட்சி படை தலைவா் வீரலட்சுமி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா்பேசும் போது, தமிழா் நலனில் எப்போதும் அக்கறை காட்டாத, கீழடி ஆய்வுகளுக்கு

அங்கீகாரம் தராத பாஜகவோடு கூட்டு வைத்துள்ள அதிமுகவையும், கரூரில் 41 போ் மரணத்துக்கு காரணமாக அமைந்த நடிகா் விஜயின் தவெகவை பொதுமக்கள் புறக்கணித்து தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக திகழும் திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.