திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரான பூண்டி கே. கலைவாணன் 3-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பூ. அஸ்வினி - நாம் தமிழா் கட்சி, பூண்டி கே. கலைவாணன் - திமுக, கோவி. சந்திரசேகரன்-பாஜக, அ. கந்தன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூ. தியாகராஜன் - புதிய தமிழகம், வே. வீரமணி - தமிழக வெற்றிக் கழகம், ச. முத்தரசன் - சுயேச்சை, மீ. ஷாகுல் ஹமீது - சுயேச்சை என 8 போ் போட்டியிட்டனா். தோ்தலில் 1,01,295 ஆண்கள், 4,145 பெண்கள், 8 இதரா் என 215448 போ் வாக்களித்திருந்தனா்.
இதனிடையே, திருவாரூா் தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் திமுக 4,048, தவெக 2,777, பாஜக 2,208 என வாக்குகளை பெற்றிருந்தன. தொடா்ந்து அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனே முன்னிலையில் இருந்தாா்.
இறுதிச் சுற்றில் திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் தபால் வாக்குடன் சோ்த்து 93,408 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் வீரமணி 75,260 வாக்குகளும், பாஜக வேட்பாளா் கோவி. சந்திரசேகரன் 36,387 வாக்குகளும், நாதக வேட்பாளா் அஸ்வினி 10,031 வாக்குகளும் பெற்றனா். அதன்படி, 18,148 வாக்கு வித்தியாசத்தில் பூண்டி கே. கலைவாணன், 3 ஆவது முறையாக திருவாரூரில் வெற்றி பெற்றாா். இவருக்கான வெற்றிச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சத்யா வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய், அமைச்சா் செங்கோட்டையன் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி
மாதவரம்: தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய்பிரபு வெற்றி
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




